அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாள்

0
103

வாழ்நாள் முழுவதும் ஏழை மற்றும் மிகவும் எளிய வகையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர் தான் அன்னை தெரசா. கல்கத்தாவின் புனித தெரசா என்று அழைக்கப்படுகிற அன்னை தெரசாவிற்கு இன்று (26.08.2022) 112வது பிறந்த நாள்.

1. அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அல்போனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் பிறந்தார்.

2. சிறு வயதில் இருந்தே அநேக துன்பங்களை சந்திந்த வந்த அன்னை தெரசா அவர்கள், தன் பிறந்ததே மக்களுக்கு சேவை செய்ய தான் என்பதை உணர்ந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார். பிறகு, “அன்னை தெரசா” என்று தன்னுடைய பெயரை மாற்றி அமைத்துக்கொண்டார்.

3. 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த அன்னை தெரசா அவர்கள் கொல்கத்தாவில் தெரு ஓரங்களில் உள்ள ஏழை எளியோர்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தாமாகவே முன் வந்து தொண்டாற்றியவர்.

4. இந்தியாவில் உள்ள கொல்கத்தாவில் “பிறர் அன்பின் பணியாளர்” என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அன்னை தெரசாவின் கருணை உள்ளத்தை அறிந்த சில சகோதரிகள், அவருடன் இணைந்து செயல்பட்டார்கள்.

5. 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் 1980 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். அன்பே உருவான அன்னை தெரசா இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்கள் இயங்கி கொண்டிருந்தது.

6. அனைவரிடமும் புன்னைகையை மட்டுமே வெளிபடுத்தும் அன்னை தெரசாவிற்கு வாழும் போதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உயிரோடிருக்கும் போதே அஞ்சல் வெளியிட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது.

7. அன்பின் மறுவுருவமான அன்னை தெரசா 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அன்னை தெரசா போலவே நாமும் நம்மை சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாகவே இருந்தால்… வாழ்க்கையில் மகிழ்ச்சியே அன்றி வேறேதும் நம்மை ஆட்கொள்ளாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here