
ஏற்றமும் இறக்கமுமாக தான் இருக்கிறது தங்கத்தினுடைய விலை! கடந்த மார்ச் மாதம் தொடங்கியது முதல் ஒரு நாள் விலை உயர்வதும், மறுநாள் விலை கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை என்னனு தெரியுமா?
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரனின் விலையானது 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,550 ரூபாய்க்கு ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.