
இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ஷாருக்கான் கதாநாயகனாகவும், நடிகை நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி ஆகிய பிரபல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக நடிகர் ஷாருக்கான் தனது மகளுடனும், நடிகை நயன்தாரா தனது கணவருடனும் திருப்பதி ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜான் ஆபிரகாம், நடிகர் ஷாருகான், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் பல எதிர்ப்புகளை சந்தித்து இருந்தாலும், உலக வரலாற்றில் சிறந்த படமாக உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர், நடிகர் ஷாருக்கான் நீல நிற ஆடை அணிந்து வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ‘ஜவான்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
ALSO READ > மகளிருக்கான கிரிக்கெட் போட்டி
ஆதலால், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பாலிவுட்டில் இவர் இசையமைத்த அறிமுகபடமாகும். செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படம் பற்றிய போஸ்டர்களை நடிகர் ஷாருக்கான் இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தற்போது சென்னையில் நடைபெற்ற ‘ஜவான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ஷாருக்கான் வந்து சென்றுள்ளார். இதனையடுத்து டிரெய்லர் வெளியீட்டிற்காக துபாய்க்கு செல்கிறார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி வருகின்ற ‘டுங்கி’ திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் , டாப்சி பன்னு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படம், இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது.