நீங்க ரயில்ல போறீங்களா? ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு! உடனே படிங்க..!

பொதுவாக ரயில் பயணம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பயணமாகவே உள்ளது. அதிலும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள பொதுமக்கள் ரயில் சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முன்னதாக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் எடை கொண்ட லக்கேஜ் வைத்திருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பின், ரயில் சேவைகளிலும் லக்கேஜ்க்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்யவதால் அதிக லக்கேஜ் கொண்டு வர வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், பயணிகள் அதிகபட்சமாக 50 கிலோ எடையுள்ள லக்கேஜ் வரை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் 50 கிலோ அல்லது அதற்கு மேல் லக்கேஜ் கொண்டு வந்தால் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் 70 கிலோ வரையுள்ள லக்கேஜ் எடுத்து செல்லலாம் எனவும், ஸ்லீப்பர் கோச்சில் செல்லும் பயணி 40 கிலோ வரையிலான லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM