உங்களால் தான் நான்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த திரிஷா…!

உங்களால் தான் நான்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த திரிஷா...!
உங்களால் தான் நான்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த திரிஷா…!

டைரக்டர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, திரிஷா, லைலா நடித்த மௌனம் பேசியதே படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த படம் வெளியாகி சுமார் 21 ஆண்டுகள் கடந்து வந்த நிலையில் இந்த படத்தோட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குனர் அமீர் தனது நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதே சமத்தில் சமயம், ஜோடி உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக அறிமுகமானவர். அதனையடுத்து சாமி, கில்லி, ஆறு போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும், அண்மையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வம் குந்தவையாக நடித்தார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயுடன் லியோ படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

Also Read >> ஆகாயத்தில் பறக்கும் ஹோட்டல்! ஜிம் முதல் நீச்சல் குளம் வரைக்கும் அசர வைக்கும் வசதி…!

இந்நிலையில், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகை திரிஷா அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top