இன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

0
40

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக, மகாதீபம் நேற்று அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மகா தீபத்தை தரிசித்த பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

பொதுவாக திருவண்ணாமலை கோவிலில் பௌர்ணமி அன்று பொதுமக்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று கார்த்திகை மாத பௌர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று காலை 8.14 முதல் நாளை காலை 9.22 மணி வரையிலும் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக உள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் சென்று வீடு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றனர். கிரிவலம் செல்ல லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அவர்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து இரண்டாவது நாளன என்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here