புதிய ஆர்டர் கிடைத்த சந்தோசத்தில் பாக்கியா; இனியாவை பற்றி ராதிகாவிடம் கவலைப்பட்ட கோபி – விஜய் டிவியின் “பாக்கியலட்சுமி” சீரியல்!

0
91

விஜய் டிவியில் ஒளி பரப்பாகக்கூடிய, “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோடை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில்…

ராதிகாவின் அம்மா: ‘நீ நிம்மதியா இருக்கணும்னு நினச்சா கோபிக்கும் அவங்க குடும்பத்து ஆளுங்களுக்கும் இருக்குற பிடிமானத்த முடிக்குறதுதா உனக்கு நல்லது’ என்று ராதிகாவிடம் சொல்கிறார்.

இதை கேட்ட ராதிகா: ‘என்னம்மா இந்த மாதிரி பேசுறீங்க இப்படி எப்படிம்மா அவங்ககிட்ட பேச முடியும்’ என்று கேட்கவே, அவரது அம்மா ‘பேசித்தான் ஆகனு ராதிகா, இதுதெல்லாம் முதலிலேயே பேசுறதுதான் நல்லது, கோபி அங்க போறதும் இங்க இருந்து யாராவது இங்க வரதோ இதெல்லாம் இருக்கவே கூடாதுன்னு கண்டிசன் போட்டு இப்பவே சொல்லிடு, உங்க குடும்பம்னா அதுல நீங்க இரண்டு பேறு மட்டும்தா இருக்கனும், இது கொஞ்சம் கஷ்டம்மாதா இருக்கும் ஆனா இப்போ விட்டுட்டனா பின்னாடி இழுத்து புடிக்குறது ரொம்பவே கஷ்டமாகிடும் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா: ‘அம்மா! கோபி, இனியா மேல உயிரையே வச்சிருக்காரு, அவளும் சின்ன பொண்ணு தன… அவளுக்கு அவ அப்பான்னா ரொம்பவே பிடிக்கும், நா எப்படிம்மா அவங்கள பிரிக்கிறது?’ என்று சொல்லி மறுக்கிறாள்.

ராதிகாவின் அம்மா: ‘அடியாருடி இவ! பொழைக்க தெரியாதவளா இருக்குற, டீச்சர் டீச்சர்னு பின்னாடியே ஓடுனியே! உருகினியே! என்ன ஆச்சி? அவ நீ, சொன்னத கொஞ்சம் கூட நம்மவே இல்லையே! அதே மாதிரி இப்போ இனியா இனியானு அவரு போனாருன்னா, நாளைக்கு அவ அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்கிறன்னு கோபிய கூட்டிட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ? மறுபடியும் நீயும் மயூவும் தெருவுல நிக்க போறிங்களா? நா உனக்கு ஒரு அம்மாவா இத சொல்லிட்ட! நீ உன்னோட குழந்தைக்கு ஒரு அம்மாவா, அவளோட எதிர்காலத்த மனசுல வச்சிட்டு முடிவு எடு… ரூமுக்கு போய், நல்ல யோசிச்சிட்டு அப்புறம் முடிவு பண்ணு! என்று ராதிகாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் பாக்கியாவும் ஜெனியும் அந்த தொழிலதிபரை பார்த்து சமையல் ஆர்டர் வாங்க அவரது அலுவலகத்துக்கு வந்து உள்ளே வர அனுமதி, கேட்டபின் வருகின்றனர். பிறகு,

அந்த தொழிலதிபர் பாக்கியவையும் ஜெனியையும் பார்த்து, ‘நீங்க இப்போ எங்க மண்டபத்துள்ள ஒரு கான்ட்ராக்டர். உங்களுக்கான மரியாதைய நா கொடுத்துதான ஆகணும்’ என்று சொல்லி, உட்கார சொல்கிறார்.

இதற்கு பாக்கியா: ‘சார்! உங்கள நெனச்ச ரொம்ப பெருமையா இருக்கு, எவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும் கீழ இருக்கவங்கள மதிக்கிறீங்க! உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு’ என்று சொல்லி மகிழ்ச்சியடைகிறாள்.

அதற்கு தொழிலதிபர்: ‘இங்க பெரிய ஆளு சின்ன ஆளுனுளா யாருமே கிடையாது. அதே மாதிரி மேல, கீழ அப்படினுளா ஒண்ணுமே இல்லம்மா, இதெல்லாம் நம்மல்லா நினச்சிக்குறதுதா!’ என்று கூறிய பின், அவர் ‘நா சொன்னது போலவே, மினி ஹால்ல ஒரு கல்யாணம் புக் ஆகிருக்கு! அதுக்கான சமையல் ஆர்டர் உங்களுக்கு தா கொடுக்க முடிவு பண்ணிர்க்க. நீங்க அத நல்லப்படியா பண்ணிடுங்க, இதுல ஏதாவது சின்ன தவறு ஏற்பட்டாலும், என்னோட மண்டபத்து மானமே போயிடும்! என்று சொல்கிறார்.

இதற்கு பாக்கியா: ‘இது எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய ஒரு வாய்ப்பு சார்! இத நாங்க சரியா பயன்படுத்திக்குவோம். உங்களோட பேர கண்டிப்பா, நாங்க இதுல காப்பாத்துவோம் சார்!’ என்று சொல்கிறார்.

அதன் பின்னர், தொழிலதிபர் ஜெனியை பார்த்து, ‘இது யார்?’ என்று கேட்கவே, பாக்கியா அதற்கு, ‘இவள் என்னோட மூத்த மருமகள்! எம்பிஎ படித்து இருப்பதாகவும், இப்போது என்னுடன் சமையல் கேட்ரிங் செய்ய உதவி செய்வதாகவும்’ சொல்கிறாள்.

அதற்கு அந்த தொழிலதிபர்: ஓ! இவங்க தா, அந்த அப்ளிகேசனை ரெடி பண்ணி, இந்த வேலைக்கு அப்ளை செய்ததா! ரொம்ப நல்ல பண்ணிர்தீங்கம்மா!’ என்று ஜெனியை புகழ்ந்தபின், பாக்கியாவிடம் ‘அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு வேலைய தொடங்குங்க’ என்று சொல்லி, பணத்திற்கான செக்கினை தந்து, ‘நல்லபடியா பண்ணி கொடுங்க’ என்று தொழிலதிபர் கூறியதும், அதனை பெற்றுக்கொண்டு பாக்கியாவும் ஜெனியும் அங்கிருந்து புறப்பட்டனர்.

மறுபக்கம் அலுவலகத்திற்கு எழில் வரவே, அங்கு ஒரு பெண் புதியதாக இருப்பதை பார்த்து எழில் தயங்கி தயங்கி பேசவே, அங்கே வந்த ப்ரொடியூசர், ‘இது எனது மகள் வர்ஷினி’ என்று சொல்கிறார். அதன் பின்னர், எழிலிடம் ப்ரொடியூசர் கதையை மாற்றுவது குறித்து, என்ன முடிவு செய்துள்ளதாக கேட்கவே, எழில் ‘எனது கதையை மாற்ற போவதில்லை’ என்று பிடிவாதமாக சொல்கிறார்.

இதற்கு ப்ரொடியூசர்: ‘தனது ஹீரோவுக்கு பிடித்த கதையை யாரு சொல்றாங்களோ அவங்கள வச்சி நா படம் பண்ணிகுற, நீங்க உங்க திங்ஸ்லாம் எடுத்துட்டு கிளம்புங்க!’ என்று சொல்கிறார்.

அதன் பிறகு, எழில்: ‘தனக்கு கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்’.

மறுபக்கம் பாக்கியா: சமையல் ஆர்டர் கிடைத்ததை, பெண்களை வரவழைத்து வேலைக்கான சமையல் ஆர்டர் வந்துள்ளதாக சொல்லி, ‘இது நமக்கு மற்ற இடம் போன்று இருக்காது, இது நமக்கு ஒரு புது டெஸ்ட், இந்த டெஸ்ட்ல்ல நாம்ப நல்லா சமச்சா தா நமக்கு இதுக்கு அப்புறம், பெரிய பெரிய ஆர்டர் கிடைக்கும்’ என்றும், இது மட்டுமில்லாமல் கல்யாண வீட்டில் முன்னாடி நின்று வரவேற்பது, தாம்பூலப்பை கொடுப்பது என நிறைய வேலையை நாம் செய்ய போவதாகவும், அதனால் யாருக்கு எது விருப்பமோ அந்த வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள்’ என்று சொல்கிறாள்.

மறுபக்கம் காரில் ராதிகாவின் குடும்பத்துடன் கோபியும் சேர்ந்து சென்று திருமணத்திற்கான ஜவுளிகளை எல்லாம் வாங்கி வருகின்றனர்.

அப்போது ராதிகா: ‘உங்களுக்கு ட்ரெஸ் பிடித்துள்ளதா? என்று கோபியிடம் கேட்கவே, அதற்கு கோபியும், ‘எனக்கு பிடிதததை தான் வாங்கி இருக்கிறேன். ஆண்கள் எப்பொழுதுமே சீக்கிரமாக உடையை வாங்கிவிடுவோம். ஆனால், பெண்கள் தான் தேடி தேடி ட்ரெஸ் எடுப்பார்கள்’ என்று சொல்கிறார். பின்னர், கோபி மயூராவிடம், ‘இனியாவிற்கு வாங்கிய ட்ரெஸ் எங்கே?’ என கேட்கவே, மயூராவும் ‘முன்னாடி தான் இருப்பதாக கூறுக்கிறாள்’.

அதற்கு ராதிகாவின் அம்மா: ‘இனியா கல்யாணத்திற்கே வரபோவதில்லை! அப்பறம் எதுக்கு இதுல்லா’ என்று கோபியிடம் கேட்கிறாள். கோபி இனியாவை பற்றி, ‘நான் எந்த துணியை வாங்கி கொடுக்கிறேனோ, அதைதான் இனிய போட்டுக் கொள்வாள்’ என்று சொல்லி ராதிகாவிடம் கவலைப்படுகிறார்.

இதற்கு ராதிகா: கோபியிடம், ‘நீங்க இதுக்கு முன்னாடி செஞ்ச மாதிரியே இதுக்கு அப்புறமும் இனியாவுக்கு செய்யலாம். கவலப்படாதீங்க!’ என்று ஆறுதலாக பேசுகிறாள்.

இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here