தமிழ்நாடு அரசின் TNPL யில் புதிய வேலை அறிவிப்பு! 2,39,000 ரூபாய் மாச சம்பளமாக வாங்கலாம்…!

TNPL Recruitment 2024 Notification Out | Apply Online Before 10 January 2024

TNPL Recruitment 2024 Notification

தமிழக அரசின் கீழ் இயங்கும் கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (Tamil Nadu Newsprint and Papers Limited – TNPL) தற்போது புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது Deputy General Manager (Civil) வேலைக்கு 01 காலியிடத்தை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் சம்பளம் ரூ.2,39,000 வழங்கப்படும்.

Deputy General Manager (Civil) பணியில் சேர்வதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தால் நீங்கள் கட்டாயம் BE/B.Tech என்ற இந்த படிப்பை படித்திருக்க வேண்டும். TNPL Vacancy க்கு அப்ளை பண்ண விரும்புவரின் வயது 46 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர்கள் BC / BCM / MBC / DNC / SC / ST வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் அவர்களுக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

TNPL Recruitment 2024 அறிவித்த வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.01.2024 என்ற தேதிக்குள் ஆஃப்லைன் வழியாக அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Also Read >> பழக்கடைகாரருக்கு அடிச்சது ஜாக்பாட்! 3.80 கோடி சொத்தை எழுதி வைத்த கஸ்டமர்! என்ன தான் நடந்தது?

TNPL Jobs 2024 வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited,
No: 67 Mount Road,
Guindy,
Chennai-600032.

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள TNPL Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய TNPL Application Form ஐ கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top