மிரட்டும் புயல் : பல்கலைகழக தேர்வுகள் இன்று ஒத்திவைப்பு..!

0
46

மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவுக்கும், சனிக்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல் சென்னை பல்கலைக் கழகம் , அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி (இன்று) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17-ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வனத்தொழில் பழகுநர் பதவி நியமனத்திற்கு தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here