மிரட்டும் மாண்டஸ் புயல்! தயார் நிலையில் மீட்பு படை : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

0
52

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு இந்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு’மாண்டஸ் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயலானது காரைக்கால் பகுதிகளில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும் சென்னையில் இருந்து 640 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்களும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here