விஜய் நடிக்கும் GOAT படத்தின் ஸ்டோரியை வெங்கட்பிரபு வெளியிட்டார்! மிரட்ட வரும் ஏலியன்ஸ்!

விஜய் நடிக்கும் ஒன்லைன் ஸ்டோரி குறித்து வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. லியோ படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடி ரசித்தனர். பாக்ஸ் ஆபிசில் 600 கோடியை தாண்டி வசூலில் பெரும் சாதனையை படைத்தது லியோ படம். அந்த படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் போதே விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிப்பர் என அறிவிக்கப்பட்டது.

விஜய்யின் புதிய படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் விஜய் உடன் சேர்ந்து பல பிரபலங்கள் நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, மோகன், கணேஷ், ஜெயராம், யோகிபாபு, வைபவ், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், சித்தார்த் முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

ALSO READ : 12th, Diploma படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் 3500 காலி பணியிடங்கள்!

இந்த நிலையில் முதலில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு முதலில் வெளியானது. அதன் பிறகு கடந்த 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி விஜய் நடிக்கும் 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் டபுள் ஆக்சனில் இருக்கும் புகைப்படத்துடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து டபுள் ட்ரீட் தர உள்ளார் என இணையதளத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு விஜயின் GOAT படத்தின் ஒன்லைன் ஸ்டோரி குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். இதைப்பற்றி பேசிய வெங்கட்பிரபு “தளபதி விஜய் போன்ற ஒரு ஹீரோவை ஏலியன்ஸ் கடத்திட்டு போன அங்க என்ன நடக்கும்” என GOAT படத்தின் லீட் குறித்து கூறியுள்ளார். இதன் மூலம் சயின்ஸ் பிக்சன் சானரில் ஏலியன்ஸ் படமாக தளபதியின் 68 படம் இருக்கலாம் எனவும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இதற்கு முன்னர் ஹாலிவுட் படத்தின் ரீமேக் படமாக GOAT படம் இருக்கலாம் என்று பரவி வந்த தகவல் பொய்யானது என வெங்கட்பிரபு கூறியுள்ளார். வித்தியாசமான கதை களத்தை கொடுக்கும் வெங்கட்பிரபுவும், ஆக்சன் கதைகளில் கலக்கும் விஜய்யும் இணைந்து உருவாகும் GOAT படம் திரையுலகில் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதியின் 68 படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top