இனிமேல் இந்த சலுகை கிடையாது! ரயில்வேயில் புதிய தகவல்…!

0
20
Today Latest News 2023

ரயில்வே துறையில் அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த குடிமக்களுக்கென வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வேயில் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.

ரயிலில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடு கட்டண சலுகை மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி இந்த சலுகைகள் கொரானா காரணமாக மற்றும் ஊரடங்கு போடப்பட்டதால் இச்சலுகை ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் இந்த சலுகைகளை வழங்கவும் இல்லை. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுத் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சலுகை ரத்தானது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்காக கொடுத்த சலுகைகள் நிறுத்தப்பட்டதால் தான் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது என ரயில்வே துறை பதில் அளித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here