‘இது கல்லூரி அல்ல பெண் குளத்தின் ஒளி விளக்கு’ – பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0
51

சென்னையில் ராணி மேரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த ராணி மேரி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டமளித்தார். அப்பொழுது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நாள். கல்லூரிகளில் இருந்து தான் விடைபெறுகிறீர்களே தவிர கற்பதில் இருந்து அல்ல என கூறினார். ராணி மேரி கல்லூரி வெறும் படிப்புக்கான கல்லூரி மட்டும் சொல்லிவிட முடியாது. பெண் குலத்துக்கு கல்வியின் ஒளிவிளக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ராணி மேரி கல்லூரி பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சிறந்த கல்வியினை வழங்கி வருகிறது. மேலும், கல்லூரி பெண்கள் விடுதிக்காக அவதிப்பட்டு வருவதால் கல்லூரி வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க ஆட்சி தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போழுது ராணி மேரி கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். அதற்காக நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம் இந்த நாள் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கிறது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here