மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 தராங்களாம்! எப்பனு தெரியுமா? முழு விவரம் உள்ளே…

திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம். இந்த திட்டம் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், வருகிற செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து இதற்கான விண்ணபங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது உணவு பாதுகாப்புத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கைவிரல் ரேகை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைரேகை கருவிகளை சரியாக இயங்கும் படி சீரமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

They will give Rs.1000 to the daughter every month! Do you know when Full details inside

LATEST POSTS IN VALAIYITHAL.COM