ரஜினியின் ஜெயிலர் படத்தோட சிறப்பு காட்சி இல்லையாம்… வருத்தத்தில் ரசிகர்கள்…!

Latest Cinema News 2023

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினிமா என்றாலே ஒரே கொண்டாட்டம் தான் ரசிகர்களுக்கு. அதிலும் அதிகாலை வெளியிடப்படும் காட்சிகளுக்கு ரொம்ப ஆரவாரமாக கொண்டாடுவார்கள். அந்தவகையில் ஜெயிலர் படம் அதிகாலை சிறப்பு காட்சியாக வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதற்க்கான சிறப்பு காட்சிகள் ஏதும் இல்லை முதல் காட்சியே காலை 9 மணியளவில் தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் போன்ற படங்களுக்கு கூட சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM