வாட்ஸ் அப்பில் வந்தது புதிய அப்டேட்… என்னன்னு சீக்கிரம் போய் பாருங்க…

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பானது உலகம் முழுவதும் கோடிகணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. செய்திகள், புகைப்படங்கள், டாகுமெண்ட்கள் என எதையும் வாட்ஸ் அப் வழியாக மிக எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனுள்ள வாட்ஸ் அப் செயலியை நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு புதுப்பித்துகொண்டே வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களில் பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு EMAIL verify செய்யப்படுகிறது. இந்த வசதி தற்பொழுது வாட்ஸ் அப்பிலும் கொடுவரப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் 4 சாதனங்களில் ஒரே வாட்ஸ் அப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் பல்வேறு அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனை தடுக்கவே ஈமெயில் verify செய்யும்படியான அப்டேட்டை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. இந்த அப்டேட்டானது விரைவில் அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தும்படி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM