உலகும் நீயே! உயிரும் நீயே! தனது குழந்தையை க்யூட்டா கொஞ்சும் நயன்தாரா! விக்னேஷ் சிவன் பகிர்ந்த போட்டோ…!

Cinema Seithikal 2023

தமிழ் சினிமாவிலே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக ரசிகர்கள் அழைப்பார்கள். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Cinima Seithikal 2023

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் டைரக்டர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து 2022ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இதனையடுத்து, வாடைகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து, விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில், நயன்தாரா தனது குழந்தையை க்யூட்டா குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த புகைப்படத்திற்கு உயிர்ஸ் சண்டே ஸ்பெஷல் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஏராளமானோர் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

தற்போது, நயன்தார ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘இறைவன்’ மற்றும் இந்தியில் ஷாருக்கான்க்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜவான் திரைப்படமானது இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM