அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜவான் திரைப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது “ஜவான்” திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Also Read : “லியோ” என்ற அந்த ஒற்றைச்சொல்… அரங்கத்தையே அதிரவிட்ட ரசிகர்கள்..! இணையத்தில் வைரலான வீடியோ!!
ஜவான் படத்தில் ட்ரெய்லரின் தொடக்கத்தில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. அவன் அடுத்தடுத்த போர்ல தோற்றுப் போனானாம்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், ஆக்ரோஷமான அப்பாவாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார் என்பதை ட்ரெய்லரின் வாயிலாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.