வெளியானது ‘கஸ்டடி’ படத்தின் டிரைலர்

0
14
Trailer of Custody Movie

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு என்ற வெற்றி படத்தை எடுத்து 100 கோடி அளவில் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து நகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுள்ளது.

இத்திரைப்படம் வருகிற மே மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்க்கான புரமோஷன் நிகழ்ச்சியை கஸ்டடி படக்குழுவினர் ஐதராபாத்தில் நடத்தியுள்ளனர். அந்த விழாவில் வெங்கட் பிரபு பேசும்போது, கஸ்டடி திரைப்படமானது நான் இதுவரை செய்திராத புதிய முயற்சி. இந்த படத்தில் வில்லன் சாகக்கூடாது என்பதுதான் இப்படத்தில் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். மொத்தமாக 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்ற விதமாக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோவுக்கும்,வில்லனுக்கு இரண்டு செட் டிரஸ் தான் அணிந்து நடித்துள்ளனர் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here