மல்லிகைப்பூ விலை அதிரடி உயர்வு! காரணம் என்னென்னு தெரியுமா?

0
61

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக கடும் உச்சத்தில் நீடித்து வருகிறது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது.

பொதுவாக, மல்லிகைப்பூவிற்கு பெண்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மல்லிகைப்பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக விலையும் மற்ற நாட்களை விட மிகவும் அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பூக்களை விவசாயிகள் வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த மாட்டுத்தாவணியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில், தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று காலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது. இன்று மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை நேற்றை காட்டிலும் கணிசமாக குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது. நேற்றை விட இன்று சற்று விலை குறைவாகவே காணப்படுகிறது. இன்று மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை நேற்றை காட்டிலும் கணிசமாக குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here