தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மோகன் ராஜா உள்ளார். இவர் இயக்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படம் சூப்பர் டுப்பர் ஹிட் அடித்தது. தனி ஒருவன் படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவியும் ஹீரோயினாக நயன்தாராவும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி மிக சிறப்பாக நடித்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இப்படம் வில்லன் கேரட்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அறிவிப்பை படக்குழு அறிவித்தது. அதன்படி, தனி ஒருவன் படம் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் 2 திரைப்படம் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Also Read : ரூ.1,44,200 ஊதியத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைகள் அறிவிப்பு! ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது!
இதையடுத்து, தற்பொழுது தனி ஒருவன் திரைப்படத்தின் ப்ரமோவை இயக்குநர் ஏ.எல்.விஜய் வெளியிட்டுள்ளார். அந்த ப்ரமோ வீடியோவில் உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தின் ப்ரமோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், இந்த படத்திற்கும் நயன்தார ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.