இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக நடிகர் ஷாருக்கான் இருந்து வருகிறார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது அட்லீ இயக்கத்தில் “ஜவான்” திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சிமர்ஜீத் சிங் நாக்ரா, அஸி பாக்ரியா, மன்ஹர் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், சமீபத்தில் ஜவான் படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியானது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரப்வேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Also Read : பிக்பாஸ் சீசன் 7 இவங்கலாம் வரப்போறாங்களா? இணையத்தில் வெளியான 18 பேரின் லிஸ்ட் இதோ…
இந்நிலையில், ஜவான் திரைப்படம் இன்னும் சிறிது நாட்களில் வெளியாக உள்ளதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதால் சென்னை சாய்ராம் கல்லூரியில் வரும் 30ம் தேதி ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.