தி லெஜண்ட் சரவணாவின் அடுத்தப்படம்… அவரே சொன்ன தடாலடி பதில்!!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கடையாக சரவணா ஸ்டோர்ஸ் கடை இருந்து வருகிறது. இந்த கடையின் அதிபரான சரவணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது கடையின் விளம்பரத்துக்காக தமன்னா, ஹன்சிகா சேர்ந்து நடனமாடினார். இந்த விளம்பர காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் இவருக்ககென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி “தி லெஜண்ட்” என்ற திரைப்படத்தில் ஹீராவாக நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் இவரின் நடனம் ஆகியவை சிறாப்பாக இருந்ததாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து, சமீபத்தில் தி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அப்பொழுது ரசிகர்கள் ஒருவேளை லியோ படத்தில் சரவணன் நடிக்கிறாரா? என்று இணையத்தில் கேள்விகள் வளம் வந்தது. இந்நிலையில், தி லெஜண்ட் சரவணன் சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடினார். அப்பொழுது ஒரு சிறுவன், உங்களுடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினான். அதற்கு பதிலளித்த தி லெஜண்ட் சரவணன் நல்ல கதைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். தற்போது அது கிடைத்துவிட்டது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் படத்தை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM