‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இந்த மாநிலத்தில் வெளியிட அனுமதியில்லை…!

0
17
'தி கேரளா ஸ்டோரி' படத்தை இந்த மாநிலத்தில் வெளியிட அனுமதியில்லை.

கேரளா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிடாக்கூடது என பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்தது. அதே போல தமிழகத்திலும் இந்த படம் திரையில் வெளியிடக்கூடாது என உளவுத்துறை எச்சரித்தது. இப்படியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் இப்படம் திரையரங்குகளில் கடந்த மே 5ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது. இளம்பெண்கள் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்திலே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் போது தியேட்டருக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே போக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக திடீரென தி கேரளா ஸ்டோரி படத்தை தியேட்டர் உரியாளர்கள் நிறுத்திவிட்டனர்.

இதனையடுத்து, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை மேற்கு வங்காளத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வையும், வன்முறையும் இந்த படம் பார்ப்பதால் ஏற்ப்படக்கூடும் என்பதால் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here