இல்லத்தரசிகளுக்கு மீண்டும் வரப்போகும் பேராபத்து… தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயர்வு!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை பலமடங்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி பெய்த மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளியின் விலை மட்டுமல்லாமல் இஞ்சி, பூண்டு உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு ஏற்கனவே 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெங்காயத்தின் விலை அதிகமாகும் பட்சத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


LATESTS POSTS IN VALAIYITHAL.COM