சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… பிக்பாஸ் சீசன் 7 னின் புதிய ப்ரமோ வெளியீடு!!

முன்னதாக மக்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சியை பயன்படுத்தி வந்தனர். அதில், பெரும்பாலானோர் படம் அல்லது சீரியல் போன்றவற்றைத்தான் அதிகமாக விரும்பி பார்த்து வந்தனர். ஆனால், தற்பொழுது ஒவ்வொரு சேனல்களும் மற்ற சேனல்களுடன் போட்டிபோட்டு கொண்டு புதிய புதிய கேம்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில், பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு சேனலாக தற்பொழுது விஜய் டி.வி உள்ளது. இந்த தனியார் சேனலில் மக்களை கவர்ந்து இழுக்க அவ்வபோது புதுப்புது ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது.அதன்படி, விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 7 எப்பொழுது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த டீசர் வெளியானது.

The house will be rented for nothing Now the house will be rented Bigg Boss season 7 new promo release read it now

இந்நிலையில், தற்பொழுது மீண்டும் பிக்பாஸ் சீசன் 7 க்கான புதிய ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரமோவில் தொகுப்பாளரான கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் வருகிறார். அப்பொழுது அவர் சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… இன்னும் என்னென்ன ஆகுமோ.. என்று கூறியுள்ளார். இந்த ப்ரமோவிற்கு பிறகு ஒரு வேளை பிக்பாஸ் வீடு இரண்டாக இருக்குமோ? அப்போ யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போறார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM