இந்தியாவை சுட்டெரிக்கபோகும் வெப்பம்..! விஞ்ஞானிகள் கொடுத்த தகவலால் அதிர்ச்சி!

0
57

அதிக வெப்பநிலை காணப்படும் பகுதி என்றாலே நம் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது பாலைவனம்தான். ஏனெனில் பாலைவனத்தில் தான் அதிக அளவு வெப்பம் காணப்படும். அந்த வகையில், தற்பொழுது உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த வெப்பநிலையை கண்டறிய விஞ்ஞானிகள் இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் மற்றும் இந்த பகுதியில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என்பது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது மிக அதிக வெப்பநிலை ஆகும். இதுபோல நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இந்த அதிக வெப்பத்தின் காரணமாக பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிக வெப்பம் காரணமாக இந்த தொழில்துறை பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here