தமிழகத்திலே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் பொது இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். அதே போல ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கான திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கிராமப்புறத்தில் இருக்கும் மக்கள் மற்றும் ஏழை எளிய பெண்மணிகள் இத்திட்டத்தினால் பயனடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அன்றாடம் வேலைக்கு செல்லும் குடும்ப பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதால், மாதத்திற்கு அவர்கள் செலவிடும் பேருந்து கட்டணம் மீதி ஆகிறது. இத்திட்டத்தினால் அவர்களது பணமும் மிச்சமாகிறது.
இந்நிலையில் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுவதால், தமிழகத்தில் ஒரு நாளைக்கு மட்டுமே 15 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழக அரசு பல கிராமப்புறங்களுக்கு செல்லும் இலவச பேருந்து இயக்கத்தை நிறுத்திவிட்டது. இதனை குறித்து தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இதில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்தும், பேருந்து நிறுத்தம் குறித்து விவாதம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அங்குள்ள கிராமப்புற மக்கள் அனைவரும் மகளிருக்கான இலவச பேருந்தை மறுபடியும் இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் இதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!