சோதனைக்கு மேல் வந்த சோதனைய சாதனையா மாற்றிய பெண்! உலகிலேயே நீளமான தாடியை வளர்த்து கின்னஸ் சாதனை…!

Today World News 2023

பொதுவாக ஆண்களுக்கு தாடி, மீசை தான் அழகு. அதுவே பெண்களுக்கு இருந்தால் அது கேலிக்குரிய விஷயமாகவே இருக்கும். ஆனால் அவை உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரட்சனையினாலே உருவாகிறது. இதனால் பலரும் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் தாடி வளர்த்து அமெரிக்க பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்கவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த பெண் எரின் ஹனிகட் என்பவர். இவருக்கு வயது 38 ஆகும். இவருக்கு பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சனை உள்ளது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்வது போன்ற பிரச்சனைகள் இருந்தது. இவர் தன்னுடைய 13 வயதில் இருந்தே ஒரு நாளைக்கு 3 முறை வரை ஷேவிங் செய்தும் அவரது முகத்தில் முடி வளர்ந்துகொன்டே தான் இருந்தது. இதனையடுத்து, உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டதால், கண் பக்கவாதம் காரணமாக தனது பார்வையையும் இழந்துவிட்டார். இதுமட்டுமல்லாமல், இவருக்கு எதிர்பாராதமாக ஏற்ப்பட்ட விபத்தில் ஒரு காலினை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். இதனைதொடர்ந்து, கோவிட் -19 தொற்றுநோயால் நாடு முழுவதும் முடங்கிய நிலையில், அவர் தன்னுடைய தாடியை வளர்க்க எரின் முடிவு செய்தார்.

இந்நிலையில், எரின் தன்னுடைய தாடியை 30 செமீ வளர்த்து உலகிலேயே மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு விவியன் வீலர் என்பவர் 25.5 செமீ தாடியை வளர்த்திருந்தார். இந்த சாதனையை எரின் தற்போது முறியடித்துள்ளார்.