அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து “கேங்க்ஸ்” என்ற வெப் தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தயாரிக்கிறார். இவர் ரஜினிகாந்த் அவர்களின் 2-வது மகள் ஆவார். அதுமட்டுமின்றி இவர், ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு திரும்புயுள்ளார்.

இயக்குனர் நோவா ஆபிரகாம் இயக்கத்தில் உருவாக்கப்படுகிற ‘கேங்க்ஸ்’ வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கேங்க்ஸ்’ வேப்தொடர் துவங்குவதற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கிளாப் போர்ட் அடித்து அதற்கான முதல் படப்பிடிப்பு வேலையை தொடங்கி வைத்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில், இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டது தற்போது பரவி வருகிறது.