விஜய் ரசிகர்களுக்கு சர்பைரைஸ் கிப்ட் கொடுத்த இயக்குனர்..! தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படத்தில் தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

The director gave a surprise gift to Vijay fans Thalapathy 68 Movie New Update watch now

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்க்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன்றன. இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். இதனை சித்தார்த் நுனி ஒளிபதிவு செய்கிறார். விஜய் இப்படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரதிற்கு ஜோடியாக ஜோதிகாவும் மற்றொரு காதாபாத்திரதிற்கு பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : அகில இந்திய ஆக்கி போட்டி : அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகள்

இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை பற்றிய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் 2 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் ” எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம் ” என்று தளபதி விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.