இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய அணை! விவசாயிகள் மகிழ்ச்சி..!

0
56

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை கடந்த ஜுலை மாதம் தொடங்கியது. ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக 16 ஆம் தேதி (ஜூலை) மேட்டூர் ஆணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழையால் அக்டோபர் 11 ஆம் தேதி இரண்டாம் முறையாக மேட்டூர் ஆணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து, தற்பொழுது மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் மூன்றாவது முறையாக நேற்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் இந்த அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here