மக்களின் தலைமேல் விழுந்த பெரிய இடி… 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த அரிசி விலை..!

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக போதிய விளைச்சல் இல்லாததே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அத்தியாவசிய பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது அரிசி. ஆசியாவில் கடந்த சில வாரங்களாகவே அரிசியின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆசியாவில் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் அதிகரித்து வரும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த இந்திய அரசு பாஸ்மதி இல்லாத மற்ற அரிசிக்கான ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இந்நிலையில், அரசின் இந்த தடையால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் வாழும் கோடிகணக்கான மக்கள் அரிசியைத்தான் உணவாக உட்கொண்டு வருகின்றனர். அரசின் இத்தகைய தடை மக்களுக்கு மிகுந்த வேதனையை தெரிவித்துள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலகளாவிய பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐநா நிதி நிறுவனம் கூறியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM