இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பிரம்பாண்டமாக உருவாகியுள்ள படம்தான் “ஜவான்” திரைப்படம். இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையத்துள்ளர்.

இந்நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் வருகை தந்தனர். நடிகை பிரியாமணி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்பு! உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் இவர்!
இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாமணி மேடையில் ஜவான் படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத்தை பாரட்டியப்படி பேசிகொண்டிருந்தார். அனிருத்தின் இசை பலரையும் கட்டிப்போடுள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இவரது இசை வேற லெவலில் இருந்தது என்றும் தற்போது பல பெரிய திரைப்படங்களான “லியோ” உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளதாகவும் கூறினார். அப்பொழுது லியோ என்று சொன்னதுமே ரசிகர்கள் கூச்சலிட்டு அரங்கத்தையே சிறிது நேரம் அதிர வைத்தனர். இந்த வீடியோ தற்போழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.