Today Cinema News 2023

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிற ‘லியோ’ திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள ‘லியோ’ திரைப்படம், வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி அனைத்து திரையங்குகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இத்திரைப்படம் அஹிம்சா என்டர்டடெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிக பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
அக்டோபர் 19-ஆம் தேதி வெளியகவிருக்கின்ற ‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கிலாந்தில், டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், அஹிம்சா என்டர்டடெயின்மென்ட் நிறுவனம் ‘வாரிசு’ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை விநியோகம் செய்தது. டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து, தற்போது லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை பன்மடங்கு அதிகமாக, 10 ஆயிரத்திற்கும் மேல் விற்று சாதனை படைத்துள்ளது.