தாய் தந்தையுடன் தளபதி விஜய்… இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோ…!

Today Cinema News 2023

Today Cinema News 2023

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள தளபதி விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 68- வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் 2 வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு கதாபாத்திரம் இளம் வயது என்பதால், விஜயை இளமையாக காட்ட இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். இந்த பணிகளுக்காக கடந்த மாதம் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றனர். கடந்த வாரம் இதற்கான பணிகளை முடித்து விட்டு, இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை திரும்பினார். இருப்பினும், நடிகர் விஜய் அமெரிகாவில் தங்கி ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை நேரில் சந்தித்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது மட்டுமின்றி, தனது தாய் தந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, அவர் தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.