லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் அதிக வசூலையும் அள்ளி குவித்தது. விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்தான் தளபதி விஜய் நடிக்கும் “லியோ” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். சமீப காலமாகவே இவரின் இசை குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிபோட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும், குறிப்பாக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான “ஜெயிலர்” மற்றும் “ஜவான்” படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
Also Read : ஏராளமான காலி பணியிடங்களை EDII நிறுவனம் அறிவிச்சிருக்காங்க! ரொம்ப சுலபமா உங்க E-Mail IDயில் விண்ணப்பியுங்க…!
இதையடுத்து, தற்பொழுது லியோ படம் குறித்து ஒரு அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் அனிருத் 17 தீம் மியூசிக்கை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 17 தீம் மியூசிக்க்கும் படத்தில் முக்கியமான இடங்களில் பின்னணியில் ஒலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் படத்தின் வெளியீட்டிற்காக ஆவாளோடு காத்துகொண்டிருக்கின்றனர்.