திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… இரட்டை குழந்தைகளுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன்பின், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனா நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் இரட்டை குழந்தைகளில் ஒருவருக்கு உயிர் ருத்ரோ நீல் என்றும் மற்றொருவருக்கு உலக் தெய்வக் என்றும் பெயரிட்டுள்ளனர்.

Tell me that I am back Nayanthara gave a mass entry with twins Video going viral on the internet read it now

இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பண்டிகை நாட்களில் தங்களின் குழந்தைகளுடன் பண்டிகையை செலிபிரேட் செய்யும் புகைப்படத்தை அவ்வபோது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read : அதிரடியாக வெளியான “ஜவான்” திரைப்படத்தின் ட்ரெய்லர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அந்த வகையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடும் புகைப்படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். ஆனால், அவர்கள் பகிரும் புகைப்படத்தில் குழந்தைகளின் முகங்கள் அவர்கள் காட்டியதில்லை. இந்தநிலையில், முதன்முறையாக நயன்தாரா தன்னுடைய மகன்களான உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை வெளி உலகிற்கு காட்டி உள்ளார். குழந்தைகள் மிகவும் அழகாக உள்ளதாக சமூகவளைதள வாசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.