அண்ணா பல்கலைக்கழகத்துல Technical Assistant வேலைக்கு 30000 ரூபா சம்பளம் தராங்களாம்!

Technical Assistant job in Anna University will pay 30000 rupees each month

அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான அறிவிப்பை annauniv.edu-ல் வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 26, 2023 அன்று அல்லது அதற்கு முன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதால் அதற்கான முயற்சி செய்து உடனே சென்னை வேலையில் சேர்ந்துவிடுங்கள்.

கல்வித்தகுதி :

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் ME/M.Tech முடித்திருந்தால் Technical Assistant வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

சம்பளம் :

Technical Assistant பதவிக்கு மாத சம்பளமாக ரூ.30,000 பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

ஆப்லைனில் விண்ணப்பிப்பதால் விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.

அப்ளிகேஷனுக்கு பீஸ் குடுக்க வேண்டாம்! டைரக்ட்டா நேர்காணலுக்கு போங்க… அழகப்பா பல்கலைக்கழக வேலையில சேருங்க..!

தேர்வு செய்யும் முறை :

அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வு ஏதும் இல்லாமல் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கிறது.

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : டிசம்பர் 13 , 2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 26 , 2023

ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி :

The HOD,
DEEE,
Anna University,
Chennai-600025.

மின்னஞ்சல் :

hodeee@annauniv.edu

krkannan@annauniv.edu

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் Official Notification & Application Form மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top