ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு! இந்த இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்..!

0
47

அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET EXAM) மொத்தம் மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌. இதில், முதல் தாள் தேர்வு கணினி வழித் தேர்வாக கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இதற்கான விடை குறிப்புகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், இதற்கான தேர்வர்கள்‌ இணையவழியில்‌ தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்‌ அடிப்படையில்‌ பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும்‌ பாடவாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின்‌ பாட வலலுநர் குழுவால்‌ இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகளின்‌ அடிப்படையில்‌ தேர்வர்களது கணினி வழித்‌ தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள்‌ கணக்கிடப்பட்டன.

இந்நிலையில், தற்பொழுது இறுதி முடிவுகள் மற்றும் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் இன்று(புதன்கிழமை) வெளியடப்பட்டுள்ளது. விடைக்குறிப்பையும், தேர்வு முடிவுகளையும் அதன் அதிகார்வபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளாலாம்.

1. முதலில் TNTRB-யின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.

2. தற்போது Login என்பதை கிளிக் செய்யவும்.

3. உங்களின் விண்ணப்பதிவு எண் மற்றும் Password-ஐ உள்ளிடவும்.

4. உங்களின் முடிவுகளை சரிபார்த்து கொள்ளவும். அதன்பின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here