தமிழக பள்ளி மாணவர்களே உங்களுக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர் என்னன்னு தெரியுமா? உடனே படிச்சு தெரிஞ்சிகோங்க…

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையினை இளம் சாதனையாளர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள சுமார் 3093 மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வித் தொகை திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் வரையிலான உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையானது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், சீர்மரபின பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Tamilnadu school students do you know what jackpot offer you got Read now and find out read it now

இதையடுத்து, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில்உள்ள பட்டியலில் உள்ள பள்ளிகளில் படித்தவர்களாக இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களில் ர் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 1.25 லட்சம் வரையிலும் உதவித்தொகை பெறலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது. மேலும், இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://yet.nta.ac.in என்கிற இணையதள பக்கத்தில் சென்று ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM