பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்! கண்ணீர்விட்டு சொல்லும் நடிகை சமந்தா…!

Latest Cinema News 2023

பொதுவாக திரைப்படங்களில் ஒரு சோகமான காட்சிகள் வந்தால், நம்மை அறியாமலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும். அதே போல சமீபத்தில் நடிகை சமந்தாவும் ஒரு படத்தில் வந்த காட்சிகளை பார்த்து அழுததாக தெரிவித்தார். இதனை குறித்து அவர் கூறியபோது…

Latest Cinema News 2023

எத்தனையோ அப்பாவி சின்ன குழந்தைகள் தங்கள் விருப்பம் இல்லாமல் விபசார இடங்களில் உயிர் இல்லாத வாழ்கையை வாழ்கிறார்கள். இது போன்ற கட்சிகளை ஒரு படத்தில் பார்த்தேன். என்னோட அடிவயிற்றில் இருந்து துக்கத்தை அடக்க முடியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அப்படிப்பட்ட நிலைமையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு ஒரு கொடூரமாக இருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே காட்சிகள் தான் நீண்ட நாளாகவே நினைவுக்கு வந்தது. வெகு நாள் தூக்கம் இல்லாமல் தவித்தேன். ஆகவே பெண் குழந்தைகளை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் கூட அவர்களின் வாழ்க்கை நாசமாகி விடும் என்பது புரிந்தது. என இவ்வாறு சோகத்துடன் சமந்தா கூறினார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM