போர் வீரனாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் சூர்யா…! மிரளவைக்கும் கங்குவா…!

Tamil Cinema News 2023

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. கங்கு என்றால் நெருப்பு என்றும் நெருப்பின் மகன் என்ற அர்த்தத்தில் இந்த படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சிவா தெரிவித்தார். மேலும், இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மையமாக எடுக்கப்படும் படம் என தெரிவித்துள்ளார். இப்படம் 3 டி தொழில் நுட்பத்தில் பத்து மொழிகளில் தயாராகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷாபதானியும், வில்லனாக பாபி தியோலும் நடிக்கின்றனர். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Tamil Cinema News

இந்நிலையில், சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தார். போரில் வீழ்ந்து கிடக்கும் வீரர்களோடு, ஈட்டியில் தீயோடு என்ட்ரீ கொடுக்கிறார் நடிகர் சூர்யா. ஆக்ரோஷமாக முகமூடியுடன் சூர்யா ஓடி வர, அவரின் கழுத்தில் அணிந்திருக்கும் புலி நகங்கள் குலுங்குகின்றன. நம் கண்முன்னே வந்து நம்மை மிரளவைக்கிறார். அதில், குதிரையில் செல்லும் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இது பெரும் வைரலாகி வருகிறது.

இந்த கதாபாத்திரத்துக்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்ததாகவும், அதோடு அதனை கலைப்பதக்கும் பல மணிநேரம் ஆகிவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM