ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! புதிய அப்டேட்டை வெளியிட்ட லால் சலாம் படக்குழு…!

Lal Salaam Film

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னால் வீரர் கபில்தேவ் ஆகியோர் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது கிரிக்கெட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லால் சலாம் படம் அடுத்த மாதம் 9ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என தெரிவித்தது.

Also Read >> மனித உரிமை போராட்டத்தை பேசும் கேப்டன் மில்லர்…! படத்தை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில், லால் சலாம் படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ‘தேர் திருவிழா” என்ற பாடல் வெளியிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாவது பாடல் பொங்கலன்று (ஜனவரி 15) வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது. இது குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மாதிரி சினிமா நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top