சற்றுமுன் வாட்ஸ் அப் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..! இனி வாட்ஸ் அப்பில் Backup செய்வது ரொம்ப ஈஸி!!

வாட்ஸ் அப் செயலி அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு செயலியாக உள்ளது. இந்த வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் செயலின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதான முறையில் குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை அனுப்பி கொள்ள முடியும். மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பயனாளர்களை கவரும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக பயனாளர்கள் பழைய மொபைலிலிருந்து புதிய மொபைலுக்கு மாறும்போது வாட்ஸ் அப் செயலில் உள்ள அனைத்து மெசேஜ்களையும் Backup செய்வார்கள் .ஆனால், அதுபோன்று Backup செய்யும்போது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், தற்பொழுது வெளியான புதிய அப்டேட்டில், வாட்ஸ் அப்பில் QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு அனைத்து மெசேஜ்களையும் ஈஸியாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட்டில் மெசேஜ்கள் மட்டுமல்லாமல் பயனர்கள் மற்றொரு நண்பர்களுடன் பகிர்ந்த போட்டோ, வீடியோ, லிங்க் என அனைத்து மெசேஜ்களையும் QR கோடு மூலமாகவே பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM