உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரம் ஹங்கேரி தலைநகரில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் இன்று (31.08.2023) டைமெண்ட் லீக் தடகள போட்டி நடைபெறுகிறது. அதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, முன்னர் வீரர் மற்றும் வேராங்கனைகள் பங்கேற்கின்றன.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மட்டுமின்றி ஒலிம்பிக் போன்ற உலக புகழ்பெற்ற போட்டிகளிலும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலக போட்டிக்கு முன்னர் நடைபெற்ற தோகா டைமண்ட் லீக், லாசானே டைமண்ட் லீக் போட்டிகளிலும் இவர் தனது திறமைகளை நிலைநாட்டியுள்ளார். அதே முனைப்போடு சுவிட்சர்லாந்தில் இன்று நடக்கவிருக்கின்ற டைமெண்ட் லீக் தடகள போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி தனது ஆதிக்கத்தை தொடரும் நோக்கில் உள்ளார்.

இதனை தொடர்ந்து உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு), ஜூலியன் வெப்பெர் (ஜெர்மனி), 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரினடா) ஆகியோர் டைமெண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்கள். உலக தடகள போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் மக்களிடையே சிறு ஏமாற்றத்தை அளித்த இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் இப்போட்டியின் நீளம் தாண்டுதலில் பங்கேற்கவுள்ளார்.