செம்ம கிளைமேட்…! கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த அடை மழை…!

0
19
Thamilnadu weather update Today News 2023

வளி மண்டலத்தின் கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் நிலவுவதால் தென் இந்திய பகுதியான நம்ம தமிழகத்திலே மழை பரவலாக பெய்து வருகிறது.

நேற்றைய தினம் சென்னையிலே காலையில் மிதமான மழையும், இரவு நேரத்திலே இடி, மின்னலுடன் கூடிய கனமான மழையையும் கொட்டித்தீர்த்தது. மேலும் சென்னையில் உள்ள கோடம்பாக்கம், நுங்கம் பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் போன்ற இடங்களில் காலையில் இருந்தே சாரல் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் திறந்தவெளியில் வைத்திருந்த 25 நெல் மூட்டைகள் அனைத்தும் தேதமாகிவிட்டன. இதனால் நனைந்த அரிசி மூட்டைகளை ஆலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதியான ரணி டவுன், முள்ளிப்பட்டு, தேவிகாபுரம், எஸ்.வி.நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டையில் அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நேற்று பகலில் மழை பெய்த நிலையில், இரவிலும் மழை வெளுத்து வாங்கியது. மேலும் மழை நீரானது சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடியது.

மயிலாடுதுறையில் உள்ள செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்ததால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையில் குடை பிடித்தபடி வண்ண வண்ண மலர்களை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.

மேகமலையில் உள்ள சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

கடலூரில் இரவு முழுவதும் 7 மணி நேரத்திற்கு மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெய்வேலி, சிதம்பரம் போன்ற இடங்களில் மழை நீர் அதிகமாக தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று அதிகாலை 4.30 மணி வரையான 20 மணிநேரத்தில் 10.6 செ. மீ. மழை இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பகுதியிலும், வால்பாறையில் 7.8 செ. மீ, விருத்தாசலத்தில் 7.3 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழக பகுதியில் 7 செ.மீ, சென்னை எண்ணூரில் 6.8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here