இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து வருகின்ற 21 ஆம் தேதி வங்காளதேசத்தில் நடக்கவிருக்கின்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கலந்துகொள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த போட்டியின் மூலமாக தனது சீனியர் வீரர்களை உலகக்கோப்பை போட்டிக்கு தயார்ப்படுத்தும் நோக்கத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இருந்தது. ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களை கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டு நியூசிலாந்து துணை கேப்டன் டாம் லதாம், டிம் சவுதி, சாண்ட்னெர், கான்வே, மிட்செல் ஆகியோருக்கு ஓய்வு அளித்துள்ளனர். வங்காளதேசத்தில் நடக்கவிருக்கின்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் லாக்கி பெர்குசன் நியூசிலாந்து அணிக்கு தலைமை தாங்குகிறார்.
Also Read : சாக்லேட்பாய் மாதவனுக்கு கிடைத்த இப்படியொரு வாய்ப்பா..? வாழ்த்துக்களை கொட்டி குவிக்கும் ரசிகர்கள்!!
லாக்கி பெர்குசன் (கேப்டன்), ஆலென், டாம் ப்ளெண்டல், ட்ர்ண்ட் பவுல்ட், சாட் பெளஸ், டேன் க்ளெவர், டீன் பாக்ஸ்ராப்ட், கைல் ஜேமிசன், கோல் மெக்கோன்சி, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் ஷோதி, ப்ளெய்ர் டிக்னர், வில் யங் ஆகியோர் கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் நடக்கவிருக்கின்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கலந்துகொள்ள சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது.