மாணவர்களே இனி நீங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்..! எதற்கு தெரியுமா? யு.ஜி.சி அறிவித்த புதிய அறிவிப்பு!!

பொதுவாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக மேற்படிப்பில் சேர ஏதாவது ஒரு பல்கலைகழகங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதுபோன்று சேரும் பல்கலைகழகங்கள் தகுதியானவையா? என்பதை யாரும் அந்த அளவிற்கு விசாரிப்பதில்லை. இதனால் நாட்டில் போலி பல்கலைகழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தேசிய பல்கலைகழக மானியக்குழு (யு.ஜி.சி) கூறுகையில், இந்தியா முழுவதிலும் உள்ள 20 பல்கலைக்கழகங்களை “போலி” என்றும், UGC சட்ட விதிகளின் கீழ் வராதவை எனவும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கும் சான்றிதழ்கள் தகுதியற்றவை எனவும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தரபிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற ‘போலி’ பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை எனவும் யு.ஜி.சி குறிப்பிடப்பட்டுள்ளது.

Students you have to be very careful UGC New Announcement Announced read now

LATEST POSTS IN VALAIYITHAL.COM