மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை தராங்களாம்..! சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கரத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இந்த திட்டம் தமிழக முதவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்றது. யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM